< Back
மாநில செய்திகள்
சேதமடைந்த அங்கன்வாடி சீரமைக்கப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

சேதமடைந்த அங்கன்வாடி சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
15 July 2023 2:09 AM IST

ராஜபாளையம் அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அங்கன்வாடி மையம்

ராஜபாளையம் அருகே உள்ள புத்தூரில் கடந்த 1986-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், சிமெண்டு ஓடு மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தில் போதுமான வசதி இல்லை. ஆதலால் இந்த சமுதாய நலக்கூடம் மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 30 குழந்தைகள் வருகின்றனர்.

வலுவிழந்த கட்டிடம்

இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது கட்டிடம் வலுவிழந்து காணப்படுகிறது. மேற்கூரையில் வேயப்பட்ட ஓடுகள் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கட்டிடத்தின் சுற்று சுவர்கள், ஜன்னல்கள் என அனைத்து பகுதிகளிலும் விரிசல்கள் விழுந்துள்ளது. கன மழை பெய்தால் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

கட்டிடத்தின் உள்ளே தரைப்பகுதியில் சிமெண்டு பெயர்ந்து உள்ளதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது.

ஆதலால் சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்