திருவாரூர்
நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணி விரைந்து தொடங்கப்படுமா?
|நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணி விரைந்து தொடங்கப்படுமா?
அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை விைரந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே கேட்
நீடாமங்கலத்தில் ெரயில்நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே கேட் அமைந்துள்ளது. இதனால் நாள்தோறும் பலமுறை ெரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நெடுஞ்சாலை பயணிகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு நிரந்தர தீர்வு மாற்றுவழி பாதைகள் தான் என கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சுற்றுச்சாலை அமைக்க முதலில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை மூலம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது. பின்னர் நான்குவழிச்சாலைத்திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த போது, அந்த திட்டத்தில் நீடாமங்கலம் பகுதியும் இணைக்கப்பட்டு சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.
இருவழிச்சாலை திட்டம்
இதையடுத்து நான்கு வழிச்சாலை திட்டபணிகள் தொடங்கி நடந்து வந்தது. திருச்சி முதல் தஞ்சாவூர் வரை முதலில் பணிகள் நிறைவடைந்தது. ஆனால் தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான பணிகள் ஏதோ காரணத்தால் தேக்கம் ஏற்பட்டது. அந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக இருவழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டது.
அந்த பணியும் முழுவதுமாக நிறைவேற்றபடாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நீடாமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டு, மண்பரிசோதனை செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறையால் திட்டவரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ெரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.
மேம்பாலம் பணி தொடங்கப்படும் என அறிவிப்பு
நீடாமங்கலம் ெரயில்வே மேம்பாலம் திட்ட பணியை தொடங்கிட பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பரிந்துரையின் பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததன் பேரில் அமைச்சர் ஏ.வ.வேலு சட்டமன்றத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்று மேம்பாலம் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார். இதற்காக தமிழக அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது.
ஆனால் நாள்தோறும் சரக்கு ெரயில் மற்றும் பயணிகள் ெரயில்கள், ெரயில் என்ஜின்கள் அடிக்கடி இயக்கப்படும் போது ெரயில்வே கேட்டும் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளூர் மக்கள் சிக்கி தவிக்கின்ற நிலை உள்ளது. ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படாதது பொதுமக்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீடாமங்கலம் மேம்பாலம் கட்டுமான பணிகளை தொடங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.