ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? பீட்டர் அல்போன்ஸ் பதில்
|மு.க.ஸ்டாலினை ஐக்கிய முன்னணி கூட்டணி தலைவராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்விக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதில் அளித்துள்ளார்.
ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள 'ஸ்பாட் லைட்' நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சிறுபான்மையினர் நல வாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து பேசுகிறார்.
ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையிலான நட்பு வலுவாக இருப்பதாகவும், எதிர்கால தேச நலன் கருதி அவரை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினை ஐக்கிய முன்னணி கூட்டணி தலைவராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்விக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதில் அளித்துள்ளார்.
இதேபோல சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பொறுமையாகவும், விளக்கமாகவும் பீட்டர் அல்போன்ஸ் பதில் அளித்துள்ளார்.