< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
28 Aug 2022 11:48 PM IST

அரசு பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர்

வடபாதிமங்கலத்தில் கஜா புயலின் போது அரசு பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் பள்ளி உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்கள் கவனம் சிதறாமல் இருக்கவும், சிறு குழந்தைகள் பாதுகாப்பு கருதியும் பள்ளி வளாகத்தினை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

கஜா புயலின் போது, மரங்கள் சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தன. இதில், சாலையோரம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சாலையோரம் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சீரமைக்கவில்லை. இடிந்து விழுந்த கற்கள் கூட இன்னமும் அதே இடத்திலேயே சிதறிக்கிடக்கின்றன.

சீரமைக்க வேண்டும்

சாலையோரம் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதால், திறந்த வெளியாக காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள் கவனம் சிதறும் நிலையிலும், சிறு குழந்தைகள் பாதுகாப்பு தன்மை இல்லாத நிலையும், விஷமிகள் பள்ளி வளாகத்தில் எளிதில் சென்று வரக்கூடிய நிலையும் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி கஜா புயலின் போது இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்