< Back
மாநில செய்திகள்
இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
விருதுநகர்
மாநில செய்திகள்

இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

தினத்தந்தி
|
2 Oct 2023 3:09 AM IST

வெம்பக்கோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயில்பட்டி,

இரவு நேர பஸ்

கொரோனா நோய் தொற்று இருந்த காலத்தில் ஒரு பகுதிகளில் இரவு நேரங்களில் பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ஒரு சில பகுதிகளில் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் பஸ் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக கழுகுமலைக்கு இரவு 9.30 மணிக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ், இரவு 10 மணிக்கு சிவகாசியில் இருந்து தாயில்பட்டி சுப்பிரமணியபுரம் படந்தால் வழியாக சாத்தூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், சாத்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு ஏழாயிரம்பண்ணை வழியாக கோவில்பட்டிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது இயங்கவில்லை.

மீண்டும் இயக்கம்

அதேபோல சாத்தூரில் இருந்து படந்தால், தாயில்பட்டி வழியாக இரவு 9.30 மணிக்கு இயக்கப்பட்ட பஸ், சிவகாசியிலிருந்து இரவு 9.30 மணிக்கு வெம்பக்கோட்டை, செவல்பட்டி வழியாக திருவேங்கடத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் முதியோர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆதலால் இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட இரவு நேர பஸ்களை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்