< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
3 Sept 2022 7:20 PM IST

நீடாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் வரை சென்று வருகின்றன.

இதேபோல் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்தும் தினமும் சென்னை, திருப்பதி, வேலூர், காஞ்சீபுரம், கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீடாமங்கலம் வழியாகத்தான் சென்று வருகின்றன. வாகனங்கள் அதிக அளவில் செல்லும் நீடாமங்கலம் நகர நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

தற்போது பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாகவும், பள்ளத்தில் தண்ணீர் தேங்கியும் நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீடாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்