< Back
மாநில செய்திகள்
ஆடு, மாடுகளை அடைக்க பட்டி அமைக்கப்படுமா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஆடு, மாடுகளை அடைக்க பட்டி அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
6 Sept 2023 12:45 AM IST

திட்டச்சேரியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் ஆடு, மாடுகளை அடைக்க பட்டி அமைக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

திட்டச்சேரியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் ஆடு, மாடுகளை அடைக்க பட்டி அமைக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

விளைநிலங்களை சேதம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது.

இந்த விளைநிலங்களில் சம்பா, தாளடி என 2 போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த விளைநிலங்களை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டு பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெருமாள் மேலவீதியில் கால்நடை பட்டி இயங்கி வந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக கால்நடை பட்டி செயல்படாமல் உள்ளது. இதனால் சமீப காலமாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

பட்டி இல்லை

அவ்வாறு சேதப்படுத்தும் கால்நடைகளை அடைக்க கால்நடை பட்டிகள் திட்டச்சேரி பகுதியில் இல்லை. பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டம் விழிதியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு போய்விடுகின்றனர். இதனால் கால்நடைகள் அதிக அளவில் காணாமல் போய்விடுகிறது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கால்நடைகளை கட்டுப்படுத்தவும், விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் திட்டச்சேரி பெருமாள் மேலவீதியில் உள்ள இடத்தில் மீண்டும் புதிய கால்நடை பட்டி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்