விருதுநகர்
சாலையில் திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்தப்படுமா?
|சாலையில் திரியும் கால்நடைகள் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளை வீட்டில் அடைத்து வைத்து வளர்க்காமல் சாலைகளில் திரியவிட்டுள்ளனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைகிறார்கள். கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்தது. ஆனால் எந்த மாடுகளையும் பிடித்து அப்புறப்படுத்தவில்லை. இதனால் தற்போது சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மீண்டும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.