< Back
மாநில செய்திகள்
கோரையாறு பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

கோரையாறு பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
12 Jun 2022 10:09 PM IST

கோரையாறு பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரையாறு பயணிகள் நிழற்குடை

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு புதிய பாலம் எதிரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையை கோரையாறு, சித்தாம்பூர், அதங்குடி, வடகோவனூர், தென்கோவனூர், திருராமேஸ்வரம், குடிதாங்கிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். திருவாரூர், மன்னார்குடி வழித்தடத்தில் இந்த கோரையாறு பயணிகள் நிழற்குடை உள்ளதால் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் படிக்கும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

விஷமிகளின் கூடாரமாக

மேலும் இந்த பயணிகள் நிழற்குடை உள்ள இடத்தில் குடியிருப்புகள் கிடையாது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடை போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக பயணிகள் உள்ளே அமருவதற்கு இருக்கைகள் இல்லாமல் உள்ளது. தரைதளம் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் விஷமிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இருக்கைகள் அமைக்க வேண்டும்

பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்கள், பெண்கள் உள்ளே அமர முடியாமல் நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி காணப்படும் கோரையாறு பயணிகள் நிழற்குடைக்கு இருக்கைகள் அமைத்து சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்