< Back
மாநில செய்திகள்
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாதா? - தமிழக அரசு விளக்கம்
மாநில செய்திகள்

ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாதா? - தமிழக அரசு விளக்கம்

தினத்தந்தி
|
4 Sept 2024 8:34 AM IST

ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்