தஞ்சாவூர்
உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
|பேராவூரணி கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பேராவூரணி:
பேராவூரணி கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மழைநீர் வடிகால்
பேராவூரணியில் சாலை விரிவாக்க பணி மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகில் ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது.
முதன்மைச் சாலையில் நடுவே சென்டர் மீடியன் அமைத்து சாலை ்பணிகள் முடிவடைந்து ஒரு வருடம் கடந்த பிறகும் இதுவரை உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்படவில்லை.
மக்கள் அவதி
இதனால் இரவு நேரங்களில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், தெருவோர வியாபாரிகள், பெண்கள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறாா்கள். குறிப்பாக இரவில் சாலையை கடக்கும் போதும் மக்கள் வெளிச்சம் இன்றி அவதிப்படுகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்கனவே உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் உயர் கோபுர மின் விளக்குகளை மீண்டும் அமைக்க வேண்டும். மேலும் கடைவீதியில் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.