நாகப்பட்டினம்
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
|நாகை-வடகுடி சாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வெளிப்பாளையம்:
நாகை-வடகுடி சாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நாகூர் வெட்டாற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நாகை - நாகூர் பிரதான சாலையில் சென்று வருகின்றன. இதன் காரணமாக நாகூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நாகை-வடகுடி சாலையில் பள்ளி, கல்லூரி பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தடை விதிக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.மேலும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் கேபிள் மற்றும் மின்சார வயர்கள் கனரக வாகனங்களில் சிக்கி அறுந்து விடுகிறது.எனவே நாகை-வடகுடி சாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.