< Back
மாநில செய்திகள்
சர்க்கரை நோய் அதிகரிப்பா? - ராதாகிருஷ்ணன் தகவல்
மாநில செய்திகள்

சர்க்கரை நோய் அதிகரிப்பா? - ராதாகிருஷ்ணன் தகவல்

தினத்தந்தி
|
31 May 2022 4:36 PM IST

சர்க்கரை நோய் அதிகரித்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் மோகன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், வேலூர் தனியார் கல்லூரியில் இதுவரை 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்