< Back
மாநில செய்திகள்
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா? திருநாவுக்கரசர் எம்.பி. பதில்
மாநில செய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா? திருநாவுக்கரசர் எம்.பி. பதில்

தினத்தந்தி
|
28 Aug 2022 5:31 AM IST

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அவருக்கே உரிய பொறுமையுடனும், விளக்கமாகவும் பதில் அளிக்கிறார்.

ஹலோ எப்.எம். வானொலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்துகொண்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் பாதயாத்திரை குறித்து பேசுகையில், கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைவதாக தெரிவித்துள்ளார். இந்த யாத்திரையின் நோக்கமே காங்கிரஸ் கட்சியை வலுவாக்கவும், மக்களிடம் நேரடியாக தொடர்புகொள்ளவும்தான் என்று கூறிய அவர், இந்த பாத யாத்திரையை பகுதி யாத்திரை என்று விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தி.மு.க. பெரிய கட்சி, அவர்கள் கொடுத்த இடங்களை பெற்றுக்கொண்டுதான் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், மராட்டியத்திலும் அதே நிலைதான் என்றும், மேற்கு வங்காளத்தில் மம்தா எங்களுடன் கூட்டு சேரவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ரவியை, தனது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து அரசியல் பேசியது பற்றி குறிப்பிடுகையில், இருவர் சந்தித்து பேசிக்கொள்ளும் போது அரசியல் பேசக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், தனி மனிதன் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது என்றும், இதில் அவர் பேசக்கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தி.மு.க. அணியில் காங்கிரஸ் நீடிக்குமா? தி.மு.க. ஆட்சி மீதான மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் விமர்சனம்?, தி.மு.க. தலைவராக, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள்? தி.மு.க.வை பா.ஜ.க. நெருங்குகிறதா? ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா? உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அவருக்கே உரிய பொறுமையுடனும், விளக்கமாகவும் பதில் அளிக்கிறார்.

மேலும் செய்திகள்