< Back
மாநில செய்திகள்
அண்ணாமலைக்கு பிறந்தநாள் பரிசாக கோவை கிடைக்குமா?
மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு பிறந்தநாள் பரிசாக 'கோவை' கிடைக்குமா?

தினத்தந்தி
|
4 Jun 2024 6:17 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

கோவை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்த நாளாகும்.அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் இன்று தான் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.தமிழக பா.ஜனதா தலைவரான அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்டார். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

கோவையில் கடும் போட்டியும், இழு பறி இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதி அண்ணாமலைக்கு வெற்றியை தேடி தருமா? அவருக்கு பிறந்தநாள் பரிசாக 'கோவை' கிடைக்குமா? இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.கோவை தொகுதியில் அண்ணாமலையை எதிர்த்து திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

மேலும் செய்திகள்