< Back
மாநில செய்திகள்
ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்டப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்டப்படுமா?

தினத்தந்தி
|
27 Jun 2022 3:21 PM GMT

ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்டப்படுமா?

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் சேதமடைந்த பழைய தாசில்தார் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய தாசில்தார் அலுவலக கட்டிடம் சேதம்

நீடாமங்கலம் தாலுகாவில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், நீதிமன்றம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சில்லறை, மொத்த வியாபார கடைகள் இயங்கி வருகிறது. நீடாமங்கலம் பழைய தாசில்தார் அலுவலக வளாகத்தின் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அருகில் சார்நிலை கருவூலம் உள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் அருகருகே உள்ளது. தற்போது பழைய தாசில்தார் அலுவலக கட்டிடம் சேதமடைந்துள்ளது.

ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பழைய நீடாமங்கலம் தாசில்தார் அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு, நீடாமங்கலம் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ்நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களை ஒரே இடத்தில் கட்டி ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்