< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
திருமக்கோட்டையில் உழவர் சந்தை அமைக்கப்படுமா?
|24 April 2023 12:15 AM IST
திருமக்கோட்டையில் உழவர் சந்தை அமைக்கப்படுமா?
திருமக்கோட்டையை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் காய்கறி, மளிகை மற்றும் பூ, பழம், மீன், கறி வாங்குவதற்கு திருமக்கோட்டைக்கு தான் வர வேண்டும். பல வருடங்களாக திருமக்கோட்டையில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடைபெற்று வந்தது. அதன் பிறகு அம்மா வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதையடுத்து பக்கத்து கிராமத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இங்கு வந்து விற்பனை செய்தனர். தற்போது வாரச் சந்தை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன்கருதி மீண்டும் திருமக்கோட்டையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.