தென்காசி
வன உயிரின வார விழா
|வாசுதேவநல்லூர் கல்லூரியில் வன உயிரின வார விழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி வளாகத்தில், நெல்லை வன உயிரின சரணாலயம் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து உலக உயிரின வார விழா கொண்டாடப்பட்டது. புளியங்குடி வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சேக் உசேன் விழிப்புணர்வு குறித்து பேசினார். "எல்லாமும் இயற்கையே" என்ற தலைப்பில் S.முகமது ஜக்கிரியா, சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா வனவிலங்குகளின் சிறப்பு பற்றியும், பாம்புகளின் சிறப்பு பற்றி அகமது ஜெரித் ஆகியோரும் பேசினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் வரவேற்றார். சாரதா நெல்லை நாயகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் முனைவர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.