தேனி
வன உயிரின வார விழிப்புணர்வு ஊர்வலம்
|கொடைக்கானல் வனக்கோட்டம், தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் பெரியகுளத்தில் நடைபெற்றது.
கொடைக்கானல் வனக்கோட்டம், தேவதானப்பட்டி வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் பெரியகுளத்தில் நடைபெற்றது. இதற்கு கொடைக்கானல் கோட்ட உதவி வன பாதுகாவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜா, பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்பட வன அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தேனி, போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். தென்கரை திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பெரியகுளம் பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தின்போது, வனங்களை பாதுகாப்போம், மழை வளம் பெறுவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.