< Back
மாநில செய்திகள்
வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
6 Oct 2023 10:55 PM IST

வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வனசரகத்தின் சார்பில் வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேப்பந்தட்டை வன சரக அலுவலகத்தில் இருந்து வனவிலங்குகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தொடங்கி வைத்தார். தாசில்தார் சரவணன், வனசரக அலுவலர் சுதாகர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் வனசரக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்