திருச்சி
வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ் அறிவுரையின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் ஆலோசனையின்படி, வன விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற கருப்பொருளுடன் கூடிய விழிப்புணர்வு ஊர்வலம், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து ஸ்ரீமத்ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வரை நடைபெற்றது. உதவி வன பாதுகாவலர் சரவணக்குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இதில் விதை பரவுதல் மூலம் காடுகளை உருவாக்குதல், மகரந்தச்சேர்க்கை மூலம் தாவர உற்பத்தியை பெருக்குதல், உணவுச்சங்கிலியை சமச்சீராக வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் வன உயிரினங்கள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் ரவி, கிருஷ்ணன், வனவர் கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.