< Back
மாநில செய்திகள்
வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வீட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்

தினத்தந்தி
|
21 July 2022 3:22 PM GMT

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.

கொடைக்கானல் தாலுகா பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பள்ளங்கி கோம்பை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி நேற்று பகலில் பேத்துப்பாறை பகுதிக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த தனியார் தோட்டத்துக்குள் நுழைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பட்டாசுகள் வெடித்தும், ஒலி எழுப்பியும் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர். அதன்பிறகு இரவு நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த யானைகள், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதில் ஏராளமான பொருட்கள் உடைந்தன. அதே வீட்டை, கடந்த 15 நாட்களுக்கு முன்பு யானைகள் தாக்கி சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர், பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் மீண்டும் நுழைந்து விடுகின்றன. எனவே நவீன தொழில்நுட்ப முறையில் யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்