< Back
மாநில செய்திகள்
சரக்கு வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
மாநில செய்திகள்

சரக்கு வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
19 Jun 2022 11:52 AM IST

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே, சரக்கு வேனை யானைகள் அடித்து சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே, சரக்கு வேனை யானைகள் அடித்து சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. சக்கரவள்ளி கிழங்குடன் சரக்கு வேன், ஆசனூர் வழியாக ஈரோட்டுக்கு சென்றது.

அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், சரக்கு வேனை வழிமறித்து தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியது. இதில், வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்