< Back
மாநில செய்திகள்
தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

தினத்தந்தி
|
19 Nov 2022 1:01 AM IST

கல்லிடைக்குறிச்சி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை வேரோடு சரித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை, பனை மரங்களை வேரோடு சரித்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.

விளைநிலங்களுக்குள் புகும் வனவிலங்குகள்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பொட்டல் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, தென்னை, மக்காச்சோளம் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர்.

இங்குள்ள விளைநிலங்களுக்கு அடிக்கடி யானை, கரடி, காட்டுப்பன்றி, மிளா போன்ற வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.

தென்னை, பனை மரங்கள் சேதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சரித்து, குருத்துகளை தின்று சேதப்படுத்தின. மேலும் அங்குள்ள ஏராளமான பனை மரங்களையும் சரித்தன. சோள பயிர்களையும் தின்று சேதப்படுத்தின.

எனவே வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகாதவாறு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்