< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
|7 Nov 2022 12:15 AM IST
பாவூர்சத்திரம் அருகே தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே திரவியநகர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது துளசிதோப்பு பகுதி. இந்த பகுதியில் அய்யா வைகுண்டர் கோவில் உள்ளது. இங்குள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரங்களில் யானைகள் இறங்கி வந்து விவசாயிகளுக்கு சொந்தமான தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், மாமரத்தின் ஓடித்து கிளைகளை சேதப்படுத்தியும் செல்கிறது.
மலைப்பகுதியின் அடிவாரத்தில் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் வராத வகையில், வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.