< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடையை உடைத்த காட்டுயானைகள்

தினத்தந்தி
|
22 Sept 2023 3:00 AM IST

தாய்முடி எஸ்டேட்டில் ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்தன.

வால்பாறை

தாய்முடி எஸ்டேட்டில் ரேஷன் கடையை காட்டுயானைகள் உடைத்தன.

காட்டுயானைகள் முகாம்

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட நல்லமுடி, ஆனைமுடி, தாய்முடி ஆகிய எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுயானைகள் கூட்டம் முகாட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனைமுடி எஸ்டேட் இறைச்சல்பாறை பகுதியில் இருந்து வந்த குட்டிகளுடன் கூடிய 11 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தாய்முடி எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தது.

விரட்டியடிப்பு

இந்த எஸ்டேட் பகுதியில் இருந்த ரேஷன் கடை கட்டிடத்தை காட்டுயானைகள் தொடர்ந்து உடைத்து வந்ததால், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு ரேஷன் கடையை மாற்றி விட்டனர். இதை அறியாத காட்டுயானைகள் ஏற்கனவே உடைத்து சேதப்படுத்திய ரேஷன் கடை கட்டிடத்தை மீண்டும் உடைத்து சேதப்படுத்தியது. இதை அறிந்த தொழிலாளர்கள் காட்டுயானைகளை கூச்சலிட்டு விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் காட்டுயானைகள் மீண்டும் வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்