< Back
மாநில செய்திகள்
வீட்டை உடைத்த காட்டு யானைகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வீட்டை உடைத்த காட்டு யானைகள்

தினத்தந்தி
|
7 Feb 2023 12:15 AM IST

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

வால்பாறை,

வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது பகலில் வெயில் அடித்து வருவதால், வறண்ட காலநிலை நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் நீர்நிலைகளுக்கு அருகே உள்ள எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக கருமலை வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அக்காமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் யானை கூட்டம் புகுந்தது. அங்கு தொழிலாளர்கள் குடியிருப்பில் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வரும் வீட்டின் கதவு, ஜன்னல்களை காட்டு யானைகள் உடைத்தன.

தொழிலாளர்கள் பீதி

தொடர்ந்து துதிக்கையை உள்ளே விட்டு, சாப்பிட உணவு பொருட்கள் ஏதேனும் கிடைக்குமா என்று தேடின. சத்தம் கேட்டு பார்த்த வடமாநில தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது மனைவி, குழந்தைகளுடன் சமையல் அறைக்கு சென்று பதுங்கிக் கொண்டு சத்தம் போட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அருகில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டும், தகரங்களை தட்டியும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

பின்னர் யானைகள் அக்காமலை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகள் புகுந்து வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகள் குடியிருப்புக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்