< Back
மாநில செய்திகள்
ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் -பீன்ஸ், உருளைக் கிழங்கு பயிர்கள் சேதம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஆசனூர் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் -பீன்ஸ், உருளைக் கிழங்கு பயிர்கள் சேதம்

தினத்தந்தி
|
10 July 2023 10:03 PM GMT

ஆசனூா் அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் பீன்ஸ், உருளைக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

தாளவாடி

ஆசனூா் அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் பீன்ஸ், உருளைக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

காட்டுயானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன.

இவைகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றன. அவ்வாறு வெளியேறும் காட்டுயானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. மேலும் விவசாய தோட்டங்களுக்குள் யானைகள் நுழைவதும், விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. சில நேரங்களில் விரட்ட செல்லும் விவசாயிகளையும் காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.

பயிர்கள் சேதம்

இந்தநிலையில் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஒங்கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 34). இவர் தன்னுடைய தோட்டத்தில் பீன்ஸ், உருளைக் கிழங்கு பயிர்களை சாகுபடி செய்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற சதாசிவம் தோட்டத்தின் முன்பக்க இரும்பு கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ½ ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ், உருளைக் கிழங்கு பயிர்கள் சேதமடைந்து கிடந்தன. மேலும் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டு இருந்த குழாய்களும் உடைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிைய விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கதவை உடைத்து தள்ளி உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு சதாசிவம் தகவல் கொடுத்துள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்