< Back
மாநில செய்திகள்
காட்டு யானை அட்டகாசம்
நீலகிரி
மாநில செய்திகள்

காட்டு யானை அட்டகாசம்

தினத்தந்தி
|
10 Sept 2023 4:30 AM IST

அய்யன்கொல்லி அருகே காட்டு யானை அட்டகாசம் செய்தது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைகடை, கோட்டப்பாடி, எடத்தால், தட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடிக்குள் காட்டு யானை புகுந்தது. அங்கு அருணாசலம் என்பவரது மளிகைக்கடையின் இரும்பு கதவை உடைத்தது. இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மளிகை பொருட்கள் சேதமடைந்தது. தகவல் அறிந்த சேரம்பாடி வனவர் ஆனந்த் மற்றும் பிதிர்காடு வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானையை விரட்டினர். அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானையை மீண்டும் விரட்டினர். காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்