< Back
மாநில செய்திகள்
வயலில் இறந்து கிடந்த காட்டு பன்றிகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வயலில் இறந்து கிடந்த காட்டு பன்றிகள்

தினத்தந்தி
|
23 Aug 2022 9:51 PM IST

வயலில் இறந்து கிடந்த காட்டு பன்றிகள்

கமுதி

கமுதி அருகே டி.புனவாசல், அ.தரைக்குடி உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதியில் காட்டு பன்றிகளின் தொல்லை இருந்து வந்ததாக அப்பகுதி விவசாயிகள் நீண்டநாட்களாக புகார் தெரிவித்து வந்தனர். இப்பன்றிகள் நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறினர். இந்நிலையில், நேற்று டி.புனவாசல் வயல் பகுதியில் 3 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், பரமக்குடி வனச்சரகர் பால்பாண்டி தலைமையில் வனவர்கள் சந்துரு, ராஜா, அன்புசெல்வன் ஆகியோர் இறந்த பன்றிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். காட்டு பன்றிகள் வயல்வெளி பகுதிக்கு வர முடியாத அளவிற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்