< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதுமலை வனப்பகுதியில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழந்த காட்டுப்பன்றிகள்
|5 Jan 2023 11:52 AM IST
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயிரிழந்த காட்டுப்பன்றிகள், ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் பன்றிகள் திடீரென அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பன்றியில் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயிரிழந்த காட்டுப்பன்றிகள், ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது