< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கரும்பு பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்
|10 Oct 2023 4:00 AM IST
பழனி அருகே தோட்டத்திற்குள் புகுந்து கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
பழனியை அடுத்த பெரியம்மாபட்டி அருகே அய்யர்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கரும்பு பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
நேற்று காலையில் முருகானந்தம் தோட்டத்துக்கு சென்ற போது காட்டுப்பன்றிகளால் பயிர்கள் நாசமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பழனி வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்ட வனத்துறையினரிடம், தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.