< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
ரூ.1 லட்சம் நிதி உதவி
|2 Aug 2022 2:48 AM IST
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் விதவை பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி
நெல்லை அருகே தாழையூத்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரையிருப்பு கிராமத்தில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த, குடும்ப தலைவரை இழந்து 3 பெண் குழந்தைகளோடு தவித்து வரும் மனைவி புஷ்பம் என்பவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் இந்த காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் மகா கிப்சன், ஆறுமுகதுரை, ராமலிங்கம், மனோகர், பாக்கியராஜ், தனசீலன், பாஸ்கர், சண்முகராஜன், சரத் கண்ணன், ராஜேஷ், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.