< Back
மாநில செய்திகள்
காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

நாட்டு வெடிகுண்டு தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி

நாட்டு வெடிகுண்டு தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.

ரோந்து

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்ெபக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் மருதாடு-ஓசூர் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இளைஞர் ஒருவர் ரத்தக்கறை படிந்த கோணிப்பை மூட்டையை இரு சக்கர வாகனத்தில் வைத்து = எடுத்துச் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த கோணிப்பையில் கோழித்தலையுடன் தயாரிக்கப்பட்ட 30 நாட்டு வெடிகுண்டுகள், தலை சிதைந்த நிலையில் இறந்து கிடந்த காட்டுப்பன்றி ஆகியவை இருப்பது தெரியவந்தது.

அந்த இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அல்லி நகரைச் சேர்ந்த அஜித் (வயது 25) என்பதும், வந்தவாசியை அடுத்த புன்னை ஏரியில் கோழித் தலையை வைத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அஜீத்தை கீழ்க்கொடுங்காலூர் போலீசார் அஜித்தை கைது செய்தனர்.

வெடிகுண்டு தயாரிப்பு

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, ''அஜித் புன்னை கிராம ஏரியில் காட்டுப் பன்றிகளை கொல்வதற்காக கோழித் தலையை வைத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துள்ளார். இதில் ஒரு நாட்டு வெடிகுண்டு மூலம் காட்டுப்பன்றி ஒன்றையும் கொன்றுள்ளார். பின்னர் கோழித் தலையை வைத்து தயாரிக்கப்பட்ட 30 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கொல்லப்பட்ட காட்டுப்பன்றி ஆகியவற்றை கோணிப்பையில் வைத்து எடுத்துச் செல்லும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

அவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள், இறந்த காட்டுப்பன்றி மற்றும் இருச்சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. மேலும் அஜித்துடன் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.

மேலும் செய்திகள்