< Back
மாநில செய்திகள்
முதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
மாநில செய்திகள்

முதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
18 Oct 2023 10:37 PM IST

முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. வனவிலங்குகளின் உணவுத் தேவையும் பூர்த்தியாகி உள்ளது.

இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் விலங்குகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் செய்திகள்