< Back
மாநில செய்திகள்
மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் - மவுனம் கலைத்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன்
மாநில செய்திகள்

மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் - மவுனம் கலைத்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன்

தினத்தந்தி
|
22 Feb 2024 4:43 PM IST

எவ்வித ஆதரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சோழிங்கநல்லூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், திருமணத்தின்போது 1,000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டன.

மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 1,000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி சுருதி புகார் அளித்திருந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தனின் மகன் சதீஷ்குமார் இன்று இந்த புகாரை மறுத்துள்ளார். எவ்வித ஆதரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து பணத்தை பறிப்பதற்காகவே இது போன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் இது தொடர்பாக மனைவி சுருதி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் சுருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்