ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி - தூக்க மாத்திரை கொடுத்தும் மின்சாரம் பாய்ச்சியும் கொன்ற கொடூரம்
|ராசிபுரம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல்,
ராசிபுரம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மோகன்ராஜை இருவரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து கொல்ல முயன்றுள்ளனர். அதில் பிழைத்துவிட கூடாது என்பதற்காக மின்சாரத்தை பாய்ச்சியுள்ளனர். தொடர்ந்து தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.