< Back
மாநில செய்திகள்
வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
மாநில செய்திகள்

வேலைக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த மனைவி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

தினத்தந்தி
|
17 April 2024 1:37 AM IST

கடந்த ஒரு மாதமாக மகேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் மகேஸ்வரன் (வயது 25). இவரது மனைவி ராமலட்சுமி (24). இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மகேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனை ராமலட்சுமி கண்டித்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ராமலட்சுமி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மகேஸ்வரன் சேலையால் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர், அவரை பரிசோதனை செய்தார். அப்போது மகேஸ்வரன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்