< Back
மாநில செய்திகள்
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..
மாநில செய்திகள்

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..

தினத்தந்தி
|
28 Jan 2024 2:27 PM IST

இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்மணி (வயது 50). இவரது மனைவி பவுனம்மாள் (48). விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரில் உள்ள தங்களது தோட்டத்து பகுதியில் வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வருவது வழக்கம். இந்தநிலையில் அவர்கள் நேற்று வழக்கம்போல தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பவுனம்மாள், அடுப்பில் இருந்த சூடான எண்ணெயை தனது கணவர் மீது ஊற்றினார். இதில் பால்மணி காயம் அடைந்தார்.

இதற்கிடையே பவுனம்மாள், அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்து வந்த கிராமத்தினரும், தீயணைப்பு படையினரும் பவுனம்மாளை கிணற்றில் இருந்து மீட்டு, சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்