< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செல்போனை விற்று மது அருந்தியதால் ஆத்திரம்... கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி
|15 May 2024 10:35 PM IST
செல்போனை விற்று மது அருந்தியதால் கணவனை கட்டையால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 12-ம் தேதி மதுபோதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக மோகனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேகப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோகனின் உடற்கூராய்வில் அவரது மார்பெலும்பு முறிந்திருப்பது தெரியவரவே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
அப்போது மோகன் மதுபோதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்ததும், சம்பவத்தன்று செல்போனை விற்று மோகன் மது அருந்தியதால் அவரது மனைவி கட்டையால் அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. இந்த நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், ரமேஷின் மனைவி கார்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.