< Back
மாநில செய்திகள்
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு - திருச்சி அருகே சோகம்
மாநில செய்திகள்

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு - திருச்சி அருகே சோகம்

தினத்தந்தி
|
15 Jan 2024 2:15 AM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, கணவன் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மனைவியும் உயிரிழந்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 80 வயதான கணேசன் என்பவர், உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை அவரது மனைவி கண்ணம்மாள் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணேசன் திடீரென இறந்துவிடவே, அதனைப் பார்த்த கண்ணம்மாள் அதிர்ச்சியில் அடுத்த பத்து நிமிடத்தில் மயங்கி விழுந்ததில் உயிரிழந்தார். கணவன் மனைவி இருவரையும் திருச்சி ஓயாமாரி மயானத்தில் உறவினர்கள் தகனம் செய்ய உள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்