< Back
மாநில செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை

தினத்தந்தி
|
3 March 2023 1:25 AM IST

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்துள்ளது.

பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் 2 நாட்கள் மழை பெய்து, வெப்பம் தணிந்தது.

தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. நெல்லையில் நேற்று மழை பெய்யவில்லை, வெயில் அடித்தது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -3, மணிமுத்தாறு -4, நம்பியாறு -7, கொடுமுடியாறு -8, அம்பை -3, சேரன்மாதேவி -7, நாங்குநேரி -1, களக்காடு -1, பாளையங்கோட்டை -3, நெல்லை -9, கன்னடியன் அணைக்கட்டு -3, களக்காடு -1, நம்பியாறு -7, மாஞ்சோலை -9, காக்காச்சி -19, நாலுமுக்கு -26, ஊத்து -17.

மாவட்டத்தில் மொத்தம் 119 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 6.63 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அணை நீர்மட்டம்

பாபநாசம் அணை நீர்மட்டம் 45.30 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 367 கன அடியாகவும், வெளியேற்றம் 930 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 59.71 அடியாக உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81.30 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 கன அடியாகவும், வெளியேற்றம் 55 கன அடியாகவும் உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்