< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை
|22 Oct 2023 12:15 AM IST
வேலாயுதம்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.
வேலாயுதம்பாளையம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், வாங்கல், நெரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததுஇந்தநிலையில் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.