< Back
மாநில செய்திகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..!
சென்னை
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..!

தினத்தந்தி
|
29 Aug 2023 1:51 PM GMT

பல நாட்கள் வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழை மக்களை குளிர வைத்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது. நெல்லை, தேனி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், நாமக்கல், உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மதுரை மாநகரின் கோரிப்பாளையம், வில்லாபுரம், மாட்டுத்தாவணி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பல நாட்கள் வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த மழை மக்களை குளிர வைத்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியுள்ளது.

மேலும் செய்திகள்