< Back
மாநில செய்திகள்
நெல்லையில் பரவலாக மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் பரவலாக மழை

தினத்தந்தி
|
19 Sept 2023 1:08 AM IST

நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் 23-ந் தேதி அதிகபட்சமாக 105 டிகிரி பாளையங்கோட்டையில் பதிவானது. வெயில் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். இதற்கிடையே கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அடித்தது.

இந்தநிலையில் நேற்று காலை முதல் மதியம் 5 மணி வரை மிதமான வெயில் அடித்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 6.15 மணிக்கு நெல்லை சந்திப்பு பகுதியில் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் பெய்த இந்த மழையால் நெல்லை சந்திப்பு பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. நெல்லை கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, டவுன், கரையிருப்பு, தாராபுரம், புதிய பஸ்நிலையம், பேட்டை, சுத்தமல்லி, ரெட்டியார்பட்டி, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றன. மேலும் மழையால் சற்று குளிர்ச்சியாக மாறியதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்