< Back
மாநில செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

தினத்தந்தி
|
31 Aug 2023 9:21 PM GMT

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. நெல்லையில் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும், நேற்று முன்தினமும் மாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. நேற்றும் பகலில் வெயில் அடித்தது. மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் அம்பை, மாஞ்சோலை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து 392 கனஅடியாக அதிகரித்து இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 355 கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அம்பை-15, சேரன்மாதேவி -2, மணிமுத்தாறு -1, பாளையங்கோட்டை-45, நெல்லை டவுன்-36, கன்னடியன் அணைக்கட்டு-11, களக்காடு-4, கொடுமுடியாறு-13, மாஞ்சோலை-7, காக்காச்சி-3, நாலுமுக்கு-1

மேலும் செய்திகள்