< Back
மாநில செய்திகள்
குமரியில் பரவலாக மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் பரவலாக மழை

தினத்தந்தி
|
15 Sept 2023 12:15 AM IST

குமரியில் பரவலாக மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பார்வதிபுரம், கம்பளம், செம்மாங்குடி போன்ற பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதுபோல் தோட்டியோடு, நுள்ளிவிளை, பேயன்குழி, கண்டன்விளை, இரணியல், திங்கள்சந்தை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பருவமழை பொய்த்துப் போன நிலையில் நேற்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்