< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
குளித்தலை-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பரவலாக மழை
|20 March 2023 12:11 AM IST
குளித்தலை-வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை அரை மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல் வேலாயுதம்பாளையம், காகிதபுரம் புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சாரல் மழை பெய்ந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.