< Back
மாநில செய்திகள்
கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூர்
மாநில செய்திகள்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தினத்தந்தி
|
4 Aug 2022 4:21 PM GMT

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழை காலை வரை விட்டு விட்டு பெய்தது. பகலில் மழை இல்லை. இதேபோல் தொழுதூர், வேப்பூர், லக்கூர், மே.மாத்தூர், கீழசெருவாய், கடலூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் கடலூரில் பிற்பகல் அல்லது மாலை இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு 70 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து மாலை 5.45 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. திட்டக்குடி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.


மேலும் செய்திகள்