< Back
மாநில செய்திகள்
உயர்மின் அழுத்த பதையில் விரிசல் காரணமாக மின் தடை: மின்வாரியம் விளக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

உயர்மின் அழுத்த பதையில் விரிசல் காரணமாக மின் தடை: மின்வாரியம் விளக்கம்

தினத்தந்தி
|
11 Jun 2023 9:16 AM IST

மத்திய மந்திரி அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கான காரணத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார். மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிலையில், அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கான காரணத்தை மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அளித்துள்ள விளக்கத்தில்,

போரூர் துணை மின்நிலைய உயர்மின் அழுத்த பதையில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இரவு 9.34 முதல் 10.12 மணிவரை மட்டுமே மின் தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று வழியில் மின்வினியோகம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்